டெண்டர் முறைகேடு வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் அவசரமாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது ஏன் என உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யககோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜு, எஸ்.பி. வேலுமணியின்ன் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. டெண்டர் பணிகளை செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
மேலும், தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே வழக்கு; எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும், உயர் நீதிமன்றத்தை தமிழக அரசு தவறாக வழி நடத்தி விட்டது எஸ்.பி.வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாமல் எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும் அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.