சென்னை தின விழாவில் பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த யுவன்

சென்னை தின நிகழ்ச்சியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இசையமைப்பாளர் யுவன் பாடியதால் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்த மக்கள். சென்னப்பட்டினம் எனப்படும் சென்னை பெருநகரம் தனது 383 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதை முன்னிட்டு, பெருநகர…

சென்னை தின நிகழ்ச்சியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இசையமைப்பாளர் யுவன் பாடியதால் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்த மக்கள்.

சென்னப்பட்டினம் எனப்படும் சென்னை பெருநகரம் தனது 383 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. சென்னை புகழை பறைசாற்றும் வகையில் சென்னை தினம் ஏற்பாடு செய்யபட்டு, இதற்காகவே பிரம்மாண்ட நிகழ்ச்சி, திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கோலாகல கொண்டாத்தத்தில், 10,000 அதிகமானோர் வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் OTT தள வெளியீடு,நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் OTT தளத்தில் படத்தை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க யுவன் ஷங்கர் ராஜா இரண்டு பாடல்களை பாடி அசத்திய விதம், பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் விழாக்கோலம் பூண்டது. ஞாயிற்று கிழமை என்பதால் ஏராளமன மக்கள் வருகை புரிந்த நிலையில், மக்களை கவரும் விதத்தில், வண்ண விளக்குகளால் ஆன நுழைவாயில் முதல், வண்ண கொடை அலங்காரம், வண்ண விளக்குகளின் தோரணம், எல்ஈடி திரை என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தது.

20க்கும் மேற்பட்ட சிற்றுண்டிகள், விற்பனை மையங்கள், உணவகங்கள், சிறுவர் விளையாட்டு திடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. குறிப்பாக பாரம்பரிய விளையாட்டுகளான நொண்டி, பம்பரம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றிருந்தன. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுவதற்கு ஏதுவாக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்ட தெரு முழுவதும், மக்கள் ஆரவாரத்துடன் நடனமாடி, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, புகைப்படம் எடுத்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

குறிப்பாக பழங்கால ரயில் மாதிரியான செல்ஃபி பூத், பயாஸ்கோப் சினிமா உள்ளிட்டவை அனைவரையும் ஆட்ச்சரியத்தில் ஆழ்த்தியது. தெருவெங்கும் தன்னார்வலர்கள் ஜோக்கர் வேடம் அணிந்து ஜக்கிலிங் செய்து காட்டியம், கோமாளி ஒருவர் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டது, புன்னகைக்கு பஞ்சமில்லாத தருணத்தை ஏற்படுத்தியது. இன்று இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, வாகன வழி மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.