யூடியூபர் இர்பான், இயக்குநர் லோகேஷ் கனகராஜை காஷ்மீரில் சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.
மேலும், லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜயுடன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரபல யூடியூப் நட்சத்திரமான இர்பான் காஷ்மீர் செல்வதாக இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டார். இதையடுத்து ரசிகர்கள் பலர் இவர் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளத் தான் காஷ்மீர் செல்கின்றனர் என இணையத்தில் பேசி வந்தனர்.
ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வாராத நிலையில், யூடியூபர் இர்பான், இயக்குநர் லோகேஷ் கனகராஜை காஷ்மீரில் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் டியூப்பர் இர்பான், தனது இன்ஸ்டா பக்கத்தில் இயக்குநர் லோகேஷை காஷ்மீர் பயணத்தின் போது சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.