முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேசிய பங்கு சந்தையில் கால் பதித்த வேல்ஸ் சினிமா..! ஆர்.கே. செல்வமணி, விக்ரம் பிரபு வாழ்த்து

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு இயக்குநர் ஆர் கே செல்வமணி, நடிகர்கள் விக்ரம் பிரபு, ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இன்று தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய திரைப்படங்களின் அறிவிப்பு குறித்தும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் சென்னை தி. நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், ஆர்வ், ஜீவா, பிரசாந்த், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஆரி அர்ஜூனன், பா. விஜய், வருண், இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், சுந்தர்.சி , ஏ.எல் விஜய், பேரரசு , நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய இயக்குநர் ஆர் கே செல்வமணி, வேல்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் இது புதிய தொடக்கம். வேல்ஸ் வளர்ந்தால் தமிழ் சினிமா வளர்ந்த மாதிரி தான். தமிழ் சினிமாவை நேசிப்பவர்களில் வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் ஒருவர். அவர் நல்ல மனதுக்கு நிச்சயமாக பெரிய இடத்தை அடைவார். பிரசாந்த் சொன்ன மாதிரி இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் வளர வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் வேல்ஸ் நிறுவனம் எங்களுடன் தான் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு வேல்ஸ் நிறுவனம் வளர்ந்து இருக்கும்.

தமிழ் சினிமாவை சரியான பிசினஸாக ஆரம்பித்து யாரும் சரியாக கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். எந்த ஒரு திரைப்படத்தையும் நஷ்டம் இல்லாமல் வியாபாரம் செய்யக் கூடிய வழிமுறை இருக்கு. அதை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. ஆனால் இன்றைக்கு யாரோ சிலர், எப்படி விவசாயிகளின் உழைப்புக்கு, அவர்களுடைய பொருளுக்கு சரியான விலை கிடைக்கவிடாமல் செய்கிறார்களோ, அதுபோலவே தமிழ் திரைப்படங்களில் தயாரிப்பாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் யார் யாரோ சாப்பிட்டு கொண்டிருக்கிற நிலை தான் இருக்கிறது.

இன்றைக்கு தமிழ் திரைப்படங்கள் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை. அதை சரியாக பயன்படுத்தினால் தமிழ் சினிமாவை உலக தரத்தில் கொண்டு செல்லலாம். தியேட்டர்கள் இருந்தாலும் ஓடிடி, சாட்டிலைட் போன்றவை உலக அளவில் படங்களை கொண்டு சேர்க்கிறது. வேல்ஸ், உலக மார்க்கெட்டை விரைவில் அடையும் எனவும் உலக அளவில் இதை கொண்டு சேர்க்கும் திறமை ஐசரி கணேஷ்க்கு இருக்கிறது எனவும் கூறினார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை தொடர்ந்து பேசிய நடிகர் விக்ரம் பிரபு, சினிமாவை பற்றி ஓரளவிற்கு தெரியும். ஆனால் பங்கு சந்தை பற்றி அவ்வளவாக தெரியாது. கற்றுக் கொண்டிருக்கிறேன். ஐசரி கணேஷ் சரியான நேரத்தில் பங்கு சந்தையில் நுழைந்துள்ளார். அவரது நிறுவனம் மேலும் மேலும் வளர வேண்டும் என்றும் பாராட்டி பேசினார்.

இவர்களை தொடர்ந்து பேசிய திரைப்பட உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், ஆரம்பத்தில் இருந்தே சினிமா மீது எனக்கு ஒரு காதல். 30 வருடமாக நானும் ஐசரி கணேஷ்ம் பயணிக்கிறோம். முதல் முறையாக கணேஷ் பங்கு சந்தையில் நுழைந்தது நமக்கு பெருமை தான். சினிமாவில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறார். அதுபோலவே ஐசரியின் இந்த முயற்சிக்கு நாமும் ஆதரவு கொடுக்க வேண்டும். இப்போது நானும் கண்டிப்பாக இதில் முதலீடு செய்ய போகிறேன். ஐசரி கணேஷ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் பெரிய அளவில் வளர்ந்து சினிமா துறைக்கு பெருமை சேர்ப்பார் என்று கூறினார்.

பின்னர் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி, இன்றைக்கு சந்தோஷமான நாள். தமிழ் சினிமாவில் ஒரு நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் நானும் ஒரு படத்தில் நடிக்கிறேன். மேலும் நிறைய விஷயங்களை செய்து வருவதாகவும், பி.டி மாஸ்டர் படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது. நண்பர்கள் நிறைய பேர் இசை நிகழ்ச்சிகள் பண்ணுகிறார்கள்.‌ எனக்கு தனி இசை
நிகழ்ச்சி பண்ண வேண்டும் என்று ஆசை. அதற்காக காத்திருக்கிறேன். தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் டாக்டர் பட்டம் நான் படித்து வாங்கியது தான். கிட்டத்தட்ட 5 வருடமாக படித்து இசையில் டாக்டரேட் பட்டம் வாங்கியுள்ளேன். டாக்டர் பட்டம் படித்து வாங்கினாலும் அதை கோடிட்டு காட்ட வேண்டியதாக உள்ளது என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரைப்படத்துறையில் ஒரே தேசம், ஒரே வரி வேண்டும்: டி.ராஜேந்தர்

Arivazhagan Chinnasamy

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்

Halley Karthik

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு

Halley Karthik