கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்-தொல்.திருமாவளவன்

கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

கனியாமூர் வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி சந்தேகத்திற்கிடையே இறந்தார். அது உயிரிழப்பு அல்ல; கொலை என மாணவியின் பெற்றோர் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறை ஆனது.

ஶ்ரீ மதியின் சாவு எப்படி நடந்தது என்ற புலனாய்வு, அது உயிரிழப்புயா? கொலையா? என்பதை காட்டிலும் பள்ளியில் நடந்த வன்முறை எப்படி நடந்தது என முற்றிலும் மாறி போய் உள்ளது. அந்த மாணவி இறப்பு எப்படி நடந்தது என்பதை பற்றி ஆய்வு செய்யாமல் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக மட்டுமே ஆய்வு நடந்து வருகிறது.

புலனாய்வுக் குழு அந்த வன்முறையில் துளியும் ஈடுபடாதவர்களை வேட்டையாடி கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டுள்ள மாணவர்கள் தவறாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எண்ணற்ற பல தலித் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 15 வயது மாணவன் 19 வயது என மாற்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

பள்ளியில் மீது நடந்த தாக்குதல்களில் தொடர்பில்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்த தலித் மக்கள் டிஜிபியை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவரை சந்திக்க இயலவில்லை.

நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். சாதியின் பெயரால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி எனது பிறந்த நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 17  2022 முதல் ஆகஸ்ட் 17 2023 வரை மணி விழாவாக கொண்டாட உள்ளோம். இந்த மணி விழா பிஜேபியை தனிமைப்படுத்த ஒரு வருடம் இந்த விழாவை கொண்டாட உள்ளோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.