ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!

ஆத்தூர், வாழப்பாடி அருகே உள்ள ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விருத்தாசலம்- சேலம் செல்லும் ரயில் முன்பு செல்பி எடுத்த இளைஞர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி உயிரிழந்தார். சேலம்…

ஆத்தூர், வாழப்பாடி அருகே உள்ள ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த
விருத்தாசலம்- சேலம் செல்லும் ரயில் முன்பு செல்பி எடுத்த இளைஞர்கள் மீது
ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர்
காங்கேயத்தான் (வயது 22). இவர், தனது நண்பர் சபரி உள்ளிட்ட 4 பேருடன் அருகில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ரயில்வே பால தண்டவாளம் பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது காரைக்காலில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த பயணிகள் அதி விரைவு ரயிலின் முன்பு செல்ஃபி எடுப்பதற்காக காங்கேயத்தானும் அவரது நண்பர் சபரி யும் தண்டவாளத்தில் நின்றுள்ளனர். அப்போது, ரயில் அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் காங்கேயத்தான் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சபரியை, அப்பகுதி
மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.

—–ம. ஸ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.