கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஒரு…

கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஒரு பக்க டயர்கள் இரண்டையும் தூக்கியபடி சென்று சடன் பிரேக் அடித்து பலத்த சத்தத்துடன் வந்த வழியை பார்த்து திரும்பி நின்றது. இதை கண்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என ஓடி சென்று பார்த்தனர். காருக்குள் மூன்று இளைஞர்கள் போதையில் இருப்பது தெரிவந்தது. காரை சோதனை செய்த போது கஞ்சா இருப்பதும் தெரியவந்துள்ளது.


அதனை தொடர்ந்து வாலிபர்கள் மூன்று பேரையும் பிடித்து குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இருவர் அமெரிக்காவில் மருத்துவம் பயின்று வருவதும் ஒருவர் திருச்சியில் எஞ்சினியரிங் படித்து வருவதும் தெரியவந்தது .
தற்போது அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்த மருத்துவ மாணவர் இரண்டு பேரும் மற்றும் எஞ்சினியரிங் மாணவர் சேர்ந்து கஞ்சா புகைத்துவிட்டு போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் இருவரையும் எதிர்கால நலன் கருதி எச்சரித்து அனுப்பி வைத்தனர். எஞ்சினியர் மாணவர் மீது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருளை கைவசம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், 20 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.