மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல்துறையினர் விசாரணை!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற இளைஞரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குதூன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரன் என்ற இளைஞருக்கும் முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் முத்து மணிக்கு பலமாக அடிப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து குபேந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. இதனிடையே போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.