“விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது” – நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது…

நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருதைப் பெற்றுக் கொண்டார். விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது பற்றி ரசிகர்களும் திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கெளரவித்துள்ளார்கள். நம்ம எல்லோருக்குமே மகிழ்ச்சியான விஷயம். இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

https://twitter.com/Idam_valam/status/1790963823643643916

டக்குனு தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்து விட்டார். இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். அவர் நாமம் வாழ்க, நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.