எலான் மஸ்க் மகளின் புதிய பெயரை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..!

எலான் மஸ்க் மகளின் பழைய பெயரை மாற்றிவிட்டு  புதிய பெயரை வைத்துள்ளனர். இந்த பெயரை கேட்டால் இப்படி ஒரு பெயரா என  நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவருடைய…

எலான் மஸ்க் மகளின் பழைய பெயரை மாற்றிவிட்டு  புதிய பெயரை வைத்துள்ளனர். இந்த பெயரை கேட்டால் இப்படி ஒரு பெயரா என  நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவருடைய மனைவி கனடா நாட்டு  இசைக்கலைஞரான கிரீம்ஸுக்கும் கடந்த வருடம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. எலான் மஸ்க் – கிரீம்ஸ் தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது. பெண் குழந்தை  பெயர் தான் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது குழந்தை வாடகைத்தாய் வழியாக பிறந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. 33 வயதான எலான் மஸ்க் மனைவி கிரீம்ஸ்  முதல் குழந்தை கர்ப்பமாக இருந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டாவது குழந்தை பெற அச்சமாக இருப்பதாகவும், அதனால் தான் வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டதாக  தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண் குழந்தைக்கு ஏற்கனவே எலான் மஸ்க் ஜோடி பெயர் சூட்டியது.  எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க் என தங்களது மகளுக்கு புதிய பெயரை பெற்றோர்கள் சூட்டியதால் டிவிட்டரில் அது பேசு பொருளானது. இந்த நிலையில் பெயர் குறித்த சர்ச்சை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் 24ம் தேதி கிரீம்ஸ் மற்றும் தன் மகளையும் அருகருகே இருக்கும் படத்தை டிவிட்டரில்  பதிவிட்டார்.  இருவரும் சிவப்பு நிற உடை  அணிந்து அவர்கள் காணப்பட்டனர். அந்த பதிவில்  ஒய் &  சி” என்று குறிப்பிட்டார். மேலும் அந்த பதிவில் எலான் மஸ்க்கும் தானும்  பொதுவாக தங்கள் மகளைப் பற்றி பொதுவெளியில் பதிவிடுவதில்லை எனவும்  அவரது தனியுரிமையை பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.

https://twitter.com/Grimezsz/status/1639049065177513987

தங்களது மகளின் பெயரான எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க்  ஐ தற்போது மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  அவளது புதிய பெயர்  Y அல்லது  Why? , அல்லது வெறும் ‘?’  என குறிப்பிட்டுள்ளார். மேலும்  அரசாங்கம் அதை அங்கீகரிக்குமா எனவும் தெரியவில்லை என  கிரீம்ஸ் தனது பக்கத்தில் எழுதியுள்ளார்.

https://twitter.com/Grimezsz/status/1639050294213459968

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.