சட்டப் படிப்பு சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நடைபெறுவதாகவும்,  tndalu.ac.in…

ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நடைபெறுவதாகவும்,  tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சட்டப் படிப்புக்கான ஆன்லைன் பதிவு நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tndalu.ac.in மூலமாக காலை 10.30 மணி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், 3 ஆண்டு சட்டப் படிப்பு, முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.