’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் இணையும் யோகி பாபு

’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாளப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜோ பேபி என்ற மலையாள இயக்குநர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்…

தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாளப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜோ பேபி என்ற மலையாள இயக்குநர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இத்திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆண் ஆதிக்க சமூதாயத்தில் பெண்களின் உண்மையான நிலை என்ன என்பதை இத்திரைப்படம் அப்பட்டமாக வெளிகாட்டியுள்ளது.
இப்படத்தில் நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது.

இத்திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கிறார். கதாநாயகனான ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இவர் சிம்மயி கணவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் படபிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஆர். கண்ணன் இயக்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.