தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தமிழில் ராதாமோகன் இயக்கிய ‘கௌரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை யாமி கவுதமுடைய தனியார் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணம் எப்படி வந்தது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு யாமி கவுதம் தரப்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க மத்திய அமலாக்கத் துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் யாமி கவுதம் மீது இரண்டாவது முறையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவர் சமீபத்தில் இந்தி திரைப்பட இயக்குநர் ஆதித்யாவை என்பவரை திருமணம் செய்துகொண்டார்.







