பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் இன்று தொடங்குகின்றன.
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அதன் ஒருபகுதியாக, இன்று மாலை மூலவருக்கு மருந்து சாத்தப்பட்டு, நடை அடைக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, இன்று மதியம் வரை மட்டுமே மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. எனவே, மூலவரை தரிசிக்க திரளான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரை மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் ஒளி வெள்ளமாக காட்சியளித்தது.