முக்கியச் செய்திகள் சினிமா

எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ரைட்டர்’ ட்ரெய்லர்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ரைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது ‘ரைட்டர்’.

நேற்று மாலை படத்தின் ட்ரெய்லர் Think Music India, யூடியூப் பக்கத்தில் வெளியானது. தொடக்கத்தில், கோவிந்த் வசந்தாவின் இசை ட்ரெய்லருக்குள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

“என் சர்வீஸ்லயே பேனா, டைப் ரைட்டர், இப்போ கம்ப்யூட்டர் இதுத்தவிர ஒரு வேலையும் செய்ததில்லை’.‘சர்வீஸ்ல பாதி நாள் ரைட்டராவே இருந்துட்டேன்; ரொம்ப நாளாச்சு… கையெல்லாம் நடுங்குது சார்’” என்று ரைட்டர் தங்கராஜாக நடித்துள்ள சமுத்திரக்கனி பேசும் வசனம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரைட்டர்களின் வலியை கண்முன் காட்சிபடுத்தும் வகையில் இருந்தது.

பொதுவாக காவல் நிலையம் என்றதும், நமக்கு முதலில் நியாபகம் வருபவர் ரைட்டராகதான் இருப்பார். காவல் நிலையம் சென்றால் பெரும்பாலும் நாம் முதலில் சந்திக்கும் நபர் அவராகதான் இருப்பார். அப்படி சந்திக்கும் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்வதோடு, அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் காட்டக்கூடிய வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

“‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’” – என்பது போன்ற வசனங்கள் தற்கால நிகழ்வுகளை நினைவூட்டக்கூடியதாக உள்ளது. ‘சார் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்களோட பெரிய லிங்க்குல உள்ளவன் சார்’ என்ற வசனத்துடன் ‘ரைட்டர்’ சிவப்பு நிற டைட்டில் கார்டுடன், குறியீடாய் நிறைவடைந்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் குறியீடு அரசியல் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், பார்த்தால் ‘ரைட்டர்’ இடதுசாரி சித்தாந்தத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படுள்ள படமா? என்ற கேள்வியையும் சேர்த்தே கிளப்பியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி

Ezhilarasan

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு 52% மக்கள் ஆதரவு!

Halley Karthik

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

Jeba Arul Robinson