பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற மல்யுத்த வீரர்கள் – தடுத்து நிறுத்திய விவசாய சங்கத் தலைவர்கள்!!

பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள் விவசாய சங்கத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ஹரித்வாரில் இருந்து வீடு திரும்பினர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்…

பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள் விவசாய சங்கத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ஹரித்வாரில் இருந்து வீடு திரும்பினர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள் : ”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதன்படி, சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக, மல்யுத்த வீராங்கனைகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்வார் சென்றனர். அங்கு விவசாய சங்கத் தலைவர்கள் வீராங்கனைகளை சமாதானம் செய்ததால் பதக்கங்களை கங்கையில் வீசுவதை கைவிட்டனர். தொடர்ந்து, வீராங்கனைகள் அனைவரும் விவசாய சங்கத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ஹரித்வாரில் இருந்து வீடு திரும்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.