கான்மன் வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் ரோஹ்டக் -ல் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக் கான்மன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் . மல்யுத்த போட்டியில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். பூஜா சிஹாக்கின் கணவர் அஜய் நந்தல்,ஹரியானா மாநிலம் ரோஹ்டக் -ல் உள்ள கர்ஹி போஹார் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜய் நந்தல்,நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். .
இது குறித்து ரோஹ்டவின் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மகேஷ் குமார் கூறுகையில், அஜய் நந்தலின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகாராணி கிஷோரி ஜாட் கன்யா மகாவித்யாலயா அருகே நடந்தது என்றும் டிஎஸ்பி மகேஷ் குமார் கூறினார். சம்பவத்தன்று அஜய் நந்தலுடன் அவரது நண்பரான ரவி இருந்ததுள்ளனர். அஜய் நந்தலின் தந்தை இது குறித்து கூறுகையில் அஜய்யின் நண்பர் ரவிக்கு போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது எனக் கூறினார்.
சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அஜய் நந்தல் மரணம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவம் நடந்தபோது ஜாட் கல்லூரிக்கு அருகில் சிலர் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இறந்த சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.







