உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 300 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பாரம்பரிய கலையான சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாக மினி மாரத்தான் ஒட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஒட்டம், 5 கிமீ வரை சென்று கொண்டிசெட்டிபட்டி பூங்காவில் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளது.
–கோ. சிவசங்கரன்







