உலகின் சிறந்த சைவ உணவுகள்; இந்தியாவின் மிசால் பாவ் உள்ளிட்ட 5 உணவுகள் தேர்வு!

உலகின் சிறந்த சைவ உணவுகள் பட்டியலில் இந்தியாவின் 5 உணவு வகைகள் தேர்வாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு தான். ஒரு நாட்டின் அமைவிடம், கலாச்சாரம், வாழ்வியல் முறையின்…

உலகின் சிறந்த சைவ உணவுகள் பட்டியலில் இந்தியாவின் 5 உணவு வகைகள் தேர்வாகியுள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு தான். ஒரு நாட்டின் அமைவிடம், கலாச்சாரம், வாழ்வியல் முறையின் அடிப்படையில் அந்நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலும் பலவிதமான உணவுகள் உள்ளன.

உலகில் உள்ள சைவ உணவு வகைகளில் சிறந்த உணவுகளை டேஸ்ட் அட்லஸ் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவின் மிசால் பாவ் 11வது இடத்தை பெற்றுள்ளது. அதேபோல், 20வது இடத்தில் ஆலு கோபியும் ( aloo gobi) , ராஜ்மா(rajma ) 22வது இடத்தையும், கோபி மஞ்சூரியன் (gobi manchurian) 24 இடத்தையும், மசாலா வடை (masala vada) 27வது இடத்தையும், பேல்பூரி ( bhel puri ) மற்றும் ராஜ்மா சவல் ( rajma chawal) முறையே 37 மற்றும் 41வது இடத்தையும் பெற்றுள்ளது.
உலகின் சிறந்த சைவ உணவு வகைகளில் இந்தியாவின் 5  உணவு வகைகள் 4.4 புள்ளிகள் பெற்று இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.