பானிபூரியில் மாம்பழ சாற்றை ஊற்றி சாப்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டீர் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி. வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரி அதிகம் பேர் விரும்புவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி பிடிக்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். இதில் பேல்பூரி, பானிபூரி மசாலா போன்ற பல வகை உணவு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் சிறிது மாற்றம் செய்து புதுவித உணவை (fusion dishes) தயாரிப்பார்கள். அதில் சில உணவுகள் மக்களிடம் வரவேற்பை பெறும். சில உணவுகளை மக்கள் விரும்பமாட்டார்கள்.
அந்தவகையில் பானிபூரியில் சிறு மாற்றம் செய்து மாம்பழ சாறை ஊற்றி சாப்பிடும் பானிபூரி தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பானிபூரியில், காரம், புளிப்பு சுவை கலந்த தண்ணீர் ஊற்றி நாம் சாப்பிடுவோம். ஆனால் அதற்கு பானிபூரியினுள் சிறிது சன்னா மசாலா வைத்து அதற்கு மேல் மாம்பழ சாற்றை ஊற்றி பரிமாறப்பட்டது. பார்ப்பதற்கும், உண்பதற்கும் இது ஒது புதுவகையாக இருந்தது.
இதேபோன்று பானிபூரியில் மாற்றம் செய்து அதில் இனிப்பு சுவையுடன் கூடிய சாக்லேட் ப்ளேவரில் பானிபூரி தயாரிக்கப்பட்டது. இதன் நடுவில் ஐஸ்கிரீம் மற்றும் ஓரியோ பிஸ்கட்டுடன் வைத்து பரிமாறப்படும். ஆனால் இந்த வகை பானிபூரியை மக்கள் அதிகம் பேர் விரும்பவில்லை. அதன் காம்பினேஷன் பலராலும் எற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.