#Ecuador | சிறையில் கைதிகள் இடையே மோதல் – 15 பேர் பலி!

கவ்யாஹுலியில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 15 கைதிகள் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில்…

#WorldNews | Clash between prisoners in prison - 15 people killed!

கவ்யாஹுலியில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 15 கைதிகள் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (நவ.13) அதிகாலை இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்வடாரில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைச்சாலைகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 400க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.