யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவர்கள்!

சென்னையை அடுத்த வண்டலூரில் அனாஹாட யோகா பயிற்சி பள்ளி சார்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 55 மாணவ மாணவிகள் தொடர்ந்து இருபது நிமிடம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சென்னையை அடுத்த…

சென்னையை அடுத்த வண்டலூரில் அனாஹாட யோகா பயிற்சி பள்ளி சார்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 55 மாணவ மாணவிகள் தொடர்ந்து இருபது நிமிடம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் அனாஹாட யோகா பயிற்சி பள்ளி சார்பில் யோகா கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சியாளர் திலீபன்  உலக சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதன்படி 6 வயது முதல் கல்லூரி மாணவர்கள் என சுமாா் 56 மாணவ, மாணவியர் பல்வேறு வகையான யோகா ஆசனங்களை 20 நிமிடம் தொடர்ந்து செய்து அசத்தினர்.

இதனையடுத்து  இந்த உலகசாதனையை நோவா புக் ஆர் வேல்ட்டு ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்தது. பின்னா், சிறப்பு விருந்தினராக  வந்த தமிழ்நாடு அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடேசன், யோகா குரு ராஜகோபால் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தாா்.

—கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.