“கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவது போல் தூய்மை பணியாளர்களையும் பாராட்ட வேண்டும்”- ரசிகரின் வைரல் வீடியோ

கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவது போல் தூய்மை பணியாளர்களையும் பாராட்ட வேண்டும் என ஐபிஎல் தொடரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 16வது…

கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவது போல் தூய்மை பணியாளர்களையும் பாராட்ட வேண்டும் என ஐபிஎல் தொடரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் விளாசினார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த இந்த ஐபிஎல் தொடரை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். இதனால் சென்னை சேப்பாக்கமே திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களில் ஒருவர் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்ல ஸ்டேடியத்தில் நாம் பொறுப்பற்று போடும் குப்பைகளை சுத்தமாக எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்களையும் பாராட்டுவோம் என தெரிவித்து, தூய்மை பணியாளர் குறித்து பாராட்டி பேசியிருந்தார். தற்போது அந்த ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.