உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 – ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை !

ஜப்பானில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற உள்ளதால் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றின் பரவலையொட்டி உலக எக்ஸ்போ கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு இந்த கண்காட்சி துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் ஜப்பானில் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

இதனிடையே, ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.