“ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்” – இணையத்தை கலக்கும் #Vidaamuyarchi படத்தின் டிரெய்லர் மேக்கிங் வீடியோ!

விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான Sawadeeka (சவதீகா) என்ற பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்பாடல் பல லட்சக்கணக்கான பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் இருந்தது.

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. கடந்த 16ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அதிர வைத்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இப்படம் பிப்.6 ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.