உலகக் கோப்பை கால்பந்து தொடர் – இன்று களமிறங்கும் 8 அணிகள்

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் நேற்று…

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி அமெரிக்கா, வேல்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.

பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற டென்மார்க் – துனிசியா இடையிலான போட்டியும், மெக்சிகோ – போலந்து இடையேயான போட்டியும் சமனில் முடிந்தது. கடைசி வரை கோல்கள் எதுவும் அடிக்காததால், இந்த அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் லீக் சுற்றில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று பிரான்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அதில் அபாரமாக விளையாடிய பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் மோதவுள்ளன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.