உலகக்கோப்பை கால்பந்து; ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.…

உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா அணியுடன் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மோதியது. போட்டி நேரம் முடியும் வரை எந்த அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன்மூலம், லீக் சுற்றில் 4 புள்ளிகளை பெற்ற பெல்ஜியம் அணி முதல் சுற்றுடன் நடப்பு உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டியது.

மற்றொரு போட்டியில், அதே பிரிவில் இடம்பெற்ற கனடா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இரண்டிற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்திய மொரோக்கோ அணி, புள்ளிப்பட்டியல் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், ஜப்பான் வீரர்கள் ரிட்சு தோன் மற்றும் ஆவோ தனகா ஆகிய வீர்ர் தலா ஒரு கோல் அடித்து அசத்தனர். ஸ்பெயின் அணி தரப்பில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. இதன்மூலம், ஜப்பான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்து சுற்றுக்குள் நுழைந்தது.

இதேபோல், இ பிரிவில் இடம்பெற்ற மற்ற 2 அணிகளான கோஸ்டாரிகா – ஜெர்மனி ஆகியவை மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கோல் மழை பொழிந்தது. கோஸ்டாரிகா வீரர்கள் 2 கோல்கள் அடித்த நிலையில், ஜெர்மனி அணி 4 கோல்களை அடித்து வெற்றிபெற்றது. நடப்பு தொடரில் ஜெர்மனி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 4 புள்ளிகளை பெற்ற அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.