உலக்கோப்பை கால்பந்து: இன்று நடைபெறும் ஆட்டங்கள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இன்றிரவு 8.30 மணிக்கு 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி குரூப் எச் பிரிவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தென் கொரியா – போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

இதேபோல், நடப்பு தொடரில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள கானா அணியும், வெற்றியே கண்டிராத உருகுவே அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நள்ளிரவு நடைபெறும் ஆட்டத்தில், ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள செர்பியா – சுவிர்சர்லாந்து அணிகள் மோத உள்ளன.

நான்காவது போட்டியாக, உலகின் முதல்நிலை அணியாக விளங்கும் பிரேசில், தரவரிசை பட்டியலில் 43வது இடத்தில் உள்ள கேமரூன் அணியுடன் மோதுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.