உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ், இங்கிலாந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் பிரான்சும், போலந்து…

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் பிரான்சும், போலந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி, 3-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. நட்சத்திர வீரர் எம்பாப்வே இரண்டு கோல்கள் அடித்து, பிரான்ஸ் அணி வெற்றிக்கு வித்திட்டார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தும், செனகல் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.

இங்கிலாந்து வீரர்களின் திறமையான ஆட்டத்தால், செனகல் அணியால் இறுதி வரை கோல் அடிக்க இயலாமல் போனது. ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் செனகல் அணியை எளிதில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.