முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து 2வது அரையிறுதி; பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன.

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வீழ்த்தி அரைஇறுதி போட்டியில் நுழைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.

நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்துள்ள மொராக்கோ ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதுவும் சுயகோல் தான். இதன் மூலம் அவர்களின் தற்காப்பு ஆட்டத்தில் பலமிக்க அணியாக உள்ளது. அந்த அணியில் யூசப் இன் நெசைரி (2 கோல்), அச்ராப் ஹகிமி, ஹகிம் ஜியேச் ஆகியோர் சிறப்பாக ஆடுகிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும்’ – விஸ்வநாதன் ஆனந்த்

Arivazhagan Chinnasamy

கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி!

Jayasheeba

புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் தொடக்கம்

Web Editor