உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கான்வே உடன் அணியின் கேப்டன் வில்லியம்சன் கைகோர்ந்து நிதானமான ஆட்டத்தை இரண்டுபேரும் வெளிப்படுத்தினர். பின்னர் கான்வே ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஒருபக்கம் வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் சிறப்பான விளையாட்டை கொடுத்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் 53 ரன்களும், வில்லியம்சன் 46 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் அரையிறுதியில் வெற்றி பெறலாம் என்ற துடிப்போடு பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.








