அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் 15வது தொடர் இந்தியா, ஒடிசாவில் அடுத்த வருடம் (2023) ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒடிசாவில் உள்ள 2 மைதானங்களில் மொத்தம் 44 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஒரு குழுவில் உள்ள 4 அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக விளையாடும் மற்றும் குரூப் முதல் இடம் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இறுதிப் போட்டி ஜனவரி 29 அன்று (உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு) புவனேஸ்வரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகளுடன் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முறையே ஜனவரி 13, ஜனவரி 15 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் எதிர் அணிகளை எதிர்த்து விளையாடும்.
இந்திய ஹாக்கி உலகக் கோப்பை அட்டவணை:
ஜனவரி 13, வெள்ளி: இந்தியா vs ஸ்பெயின் – 7:00 PM IST,
ஜனவரி 15, ஞாயிறு: இந்தியா vs இங்கிலாந்து -மாலை 7:00 IST,
ஜனவரி 19, வியாழன்: இந்தியா vs வேல்ஸ் – 7:00 PM IST







