உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் இன்று தொடங்கவுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நடைபெற உள்ள இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிக்கு இன்று இரவு 8 மணி முதல் டிக்கெட்டுகள் ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் டிக்கெட் விற்பனை தொடங்கியது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டன.







