உலகக் கோப்பை கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா விலகல்! பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!

உலக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – வங்கதேச போட்டியின் போது பந்தினை…

உலக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – வங்கதேச போட்டியின் போது பந்தினை தடுத்த போது கணுக்காலில் அடிபட்டதால் ஹர்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.  அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.

இந்திய  அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், காயம் குணமாக அதிக நாள்கள் ஆகுமென்பதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.  அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.