பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்

  செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்து சென்றார்.   சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில்…

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்து சென்றார்.

 

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இன்று 5-வது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய ஓபன் பி அணியினர் விளையாடி வருகின்றனர். இந்திய அணி, ஸ்பெயின் அணியுடன் விளையாடி வருகின்றது. இந்த ஆட்டத்தில் ஓபன் பி இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் என மூன்று தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில், செஸ் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் அணியான நார்வே அணி ஸாம்பியா அணியுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், போட்டியின் போது இடைவெளி நேரத்தில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், செஸ் வீரர்களின் விளையாட்டை பார்வையிட்டபடி சென்றார். அப்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா விளையாடி கொண்டிருந்ததை கார்ல்சன் கவனித்தார்.

 

பின்னர் சிறிது நேரம் அங்கேயே நின்று பிரக்ஞானந்தாவின் விளையாட்டை கவனித்து விட்டு நகர்ந்து சென்றார். முந்தைய சர்வதேச போட்டிகளில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா 2 முறை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பிரக்ஞானந்தாவின் விளையாட்டை கார்ல்சன் கவனித்து சென்ற வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.