நியூஸ் 7 தமிழ் பல்வேறு யூடியூப் பக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இவை உருவாக்கப்படவில்லை, மக்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழ் ப்ரைம், நியூஸ் 7 தமிழ் பக்தி, நியூஸ் 7 தமிழ் அக்ரி உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளுக்குப் பொதுமக்கள் அளித்த பேராதரவைத் தொடர்ந்து ஆரோக்கியத்திற்கென நியூஸ் 7 தமிழ் ஹெல்த் என்ற புதிய யூடியூப் சேனலை, தாம்பரம் அருகே உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சாய்ராம் கல்வி குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தில்லை வள்ளல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
https://twitter.com/news7tamil/status/1554424460966793216
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் நடத்தும் ‘வேண்டாம் போதை’ உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பேசிய நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், போதையால் முதலில் உடலில் பாதிப்பு ஏற்படுகிறது, பின்னர் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுகிறது, அதன் பின்னர் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன், போதை பழக்கத்தால் நாடும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், போதைக்கு அடிமையாவது எளிமை எனத் தெரிவித்த அவர், எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் வாழ்வது அவ்வளவு எளிதல்ல எனக் கூறினார்.
எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருந்தால், முதலில் நம்முடன் இருக்கும் நண்பர்களே நம்மைக் கேலி செய்வார்வர்கள் எனத் தெரிவித்த அவர், நாம் தொடர்ந்து எந்த கெட்ட பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அவர்களே பின்னர் பாராட்டும் நிலைக்கு வந்துவிடலாம் எனத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், நியூஸ் 7 தமிழ் பல்வேறு யூடியூப் பக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இவை உருவாக்கப்படவில்லை, மக்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.







