மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை

மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். மேலும், 2018க்கு பிறகு உலக குத்துச்சண்டை…

மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற 5ஆவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். மேலும், 2018க்கு பிறகு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற வீராங்கனையும் இவரே.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜிட்பாங் ஜுடாமஸை வீழ்த்தி இந்தச் சாதனையை செய்தார்.
52 கிலோ எடைப்பிரிவில் மோதிய ஆட்டத்தில் 30-27, 29-28, 29-28, 30-27, 29-28 என்ற புள்ளிக் கணக்கில் நிகாத் ஜரீன் வெற்றி பெற்றார். இவருக்கு முன்பு 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜென்னி (2006), லேகா (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை ஆவர். 

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நமது குத்துச்சண்டை வீராங்கனைகள் நம்மை பெருமை கொள்ள செய்துவிட்டனர். அற்புதமான வெற்றியைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்ற நிகாத் ஜரீனுக்கு வாழ்த்துகள். வெண்கலம் வென்ற மணிஷா மெளன், பர்வீன் ஹூடா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினும் நிகாத் ஜரீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்றி, பல இளம்பெண்களும் அவர்களின் கனவை பின்தொடர உந்துசக்தியாக இருக்கும் என்று டுவிட்டரில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு பிறகு நிகாத் ஜரீனும் நான் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிறேனா? இது எனது கனவுகளில் ஒன்று என்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் தங்கம் வென்றவுடன், எனது பெற்றோரை நினைத்துக் கொண்டேன். அவர்கள் தான் என்னை குத்துச்சண்டை வீரராக மாற்ற கடுமையாக உழைத்தனர்” என்றார்.

நிகாத்தின் கனவு நினவானது. அவர் விரும்பியதுபோல இன்று டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறார் ஜரீன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.