உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-வெளியேறினார் ஸ்ரீகாந்த்; அடுத்த சுற்றில் 2 இந்திய வீரர்கள்

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களான லக்ஷயா சென் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரம், 2 வது சுற்றில்…

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களான லக்ஷயா சென் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அதேநேரம், 2 வது சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரீகாந்த், சீனாவின் ஜாவோ ஜுன் பெங்கிடம் நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

டோக்கியோவில் ஆகஸ்ட் 22 தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்றைய 2வது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் லக்ஷயா சென் ஸ்பெயின் வீரரான லூயிஸ் என்ரிக் பெனல்வர் உடன் மோதினார்.

இதில் இந்தியாவின் லக்ஷயா சென், ஸ்பெயின் வீரரை 21-17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி 4 வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அதனை அடுத்து மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜப்பானை சேர்ந்த கெண்டோ மோமோடோ உடன் மோதினார்.

பிரணாய்

பரபரப்பான ஆட்டத்தில் பிரணாய் சிறப்பாக விளையாடி, இரண்டு செட்டிகளையும் 21-17, 21-16 என கைப்பற்றி ஜப்பான் வீரரை வீழ்த்தி, 4 வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், பிரணாய் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இரண்டு இந்திய வீரர்களும் மோத உள்ளதால் வெற்றி பெறும் வீரர் மட்டுமே காலிறுதிக்குத் தகுதி பெறுவார் என்பதால், ஆட்டத்தில் கூடுதல் சுவாரஸ்யம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இன்று நடைபெற்ற மற்றொரு  ஆட்டத்தில் உலகின் 13 ஆம் நிலை வீரரான இந்தியாவின் கிடம்பி ஶ்ரீகாந்த், சீன வீரரான ஜுன் பெங் ஜாஹோ விடம் 2-0 என வீழ்ந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

லக்ஷயா சென், கான்வெல்த்தில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.