சென்னையை கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் உள்ள நீர்நிலை கால்வாய் பகுதிகளில் துணைமேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கொசு ஒழிப்பு பணியில் 3 ஆயிரத்து 463 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: உக்ரைன் – தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் உள்ள கால்வாய்களில் அனுமதியின்றி கழிவுகளை கொட்டும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








