உக்ரைன்: தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை இல்லாத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை…

உக்ரைனில் உள்ள சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை இல்லாத உக்கிர போராக மாறி வருகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு களமிறங்கிய ரஷ்ய ராணுவம், உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது.

கடந்த 11 நாட்களாக நடந்து வந்த போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு விரைவில் முதல் மாநிலமாக உருவெடுக்க உள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்று உக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.