தமிழக பாஜக எம்எல்ஏக்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வரி ஆகியோர் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தலைமையில் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், தமிழக பாஜக எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.







