உலகக்கோப்பை மகளிர் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் களம் காண்கின்றன.
இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து சற்று வரிவாக பார்ககலாம். இங்கிலாந்து அணி தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் ஹைதி, சீனா, டென்மார்க், ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது.கால் இறுதியில் கொலம்பியாவையும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.
ஸ்பெயின் அணி தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது. லீக் ஆட்டத்தில் ஜப்பான், கோஸ்டாரிகா, ஜாம்பியா அணிகளை வென்றுள்ளது. கால்இறுதியில் நெதர்லாந்தையும், அரை இறுதியில் சுவீடனையும் தோற்கடித்துள்ளது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் பதக்கத்தை வென்றே தீர வேண்டும் என வீராங்கனைகள் ஆர்வமாக உள்ளனர். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும்.







