சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சமீப காலமாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கப் பணிகளில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அணிகளை பலப்படுத்தும் வகையில் வாரந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த சில ஆலோசனை கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை சந்தித்து இயக்கம் நலன் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 மேற்பட்ட மகளிர் அணியினர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.மகளிர் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகளிர்களுக்கு இனிப்பு வழங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. நடிகர் விஜய், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.