மார்பிள் கல் துண்டுகள் மூலம் நடிகர் ஷாருக்கானின் உருவத்தை கலைஞர் ஒருவர் உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. முதல் நாளில் சுமார் 75 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில், ஷாருக்கான் மீது தீவிர பற்று கொண்ட கலைஞர் ஒருவர் அவர் உருவத்தை மார்பிள் கல் துண்டுகள் மூலம் உருவாக்கி அசத்தியுள்ளார். இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.