10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் உள்ளன. இங்கிலாந்து அணி இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியது.
இந்நிலையில், மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வரும் 23-வது லீக் ஆட்டத்தில் (குரூப் 1) இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.




