முக்கியச் செய்திகள் விளையாட்டு

மகளிர் T-20 போட்டி; சூப்பர் நோவாஸ் அணி சாதனை

மகளிருக்கான T-20 போட்டியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று சூப்பர் நோவாஸ் அணி சாதனை படைத்துள்ளது. 

மகளிர் T 20 கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் போல, மகளிருக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் முனைப்பில், 3 அணிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நடப்பண்டிற்கான மகளிர் T20 தொடரில், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூப்பர் நோவாஸ் அணி. நேற்றைய தினம் புனேவில் நடைபெற்ற போட்டியில் வெலாசிட்டி மற்றும் சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற வெலாசிட்டி பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. எனவே மூன்றாவது முறையாக மகளிர் T20 சாம்பியன் பட்டத்தை சூப்பர் நோவாஸ் வென்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க சட்டத்தில் திருத்தம்

Web Editor

”தமிழகம், புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது”- முதல்வர் நாராயணசாமி!

Jayapriya

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று 2வது டி20

Halley Karthik