ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது…

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கால்இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இலங்கை அணி பந்துவீச்சை மேற்கொள்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.