மகளிர் உரிமைத் தொகை கேட்டு முறையிட்ட பெண்கள்! உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகளிர் உதவித்தொகை கேட்டு பெண்கள் முறையிட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை…

ஸ்ரீபெரும்புதூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மகளிர் உதவித்தொகை கேட்டு பெண்கள் முறையிட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து சென்னைக்கு காரில் சென்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தில் வழியாக கார் சென்றது. அங்கு வழியில் காத்திருந்த பெண்களை பார்த்து காரை நிறுத்தச்சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பெண்களிடம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் அங்கிருந்த கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு கிராம பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த கட்சி பிரமுகரிடம் கேட்டறிந்த முதலமைச்சர், இது குறித்து உடனடியாக அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் பேசி மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதோடு அப்பகுதியின் முக்கிய சாலைகளில் விளக்கு இல்லாமல் இருப்பதால் உடனடியாக உயர் கோபுர விளக்கு அமைக்கவும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வை செல்போனில் படம் பிடித்த நபர் அதை வெளியிடவே அந்த வீடியோ தற்போது சமூகவலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.