யானைக்கும் பாகனுக்கும் இடையே உள்ள பிணைப்பை விளக்கும் வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
இந்திய ரயில்வே கணக்குகள் சேவை (IRAS) அதிகாரி ஆனந்த் ரூபனகுடி என்பவர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவை இதுவரை சுமார் 21000 பேர் பார்த்துள்ளனர்.
https://twitter.com/i/status/1707028304354820247
அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தில் காத்திருக்கும் நண்பருடன் செல்ல பாகன் முயற்சிக்கிறார். ஆனால் அவரை விடமால் தனது தும்பிக்கையால் யானை தடுக்கிறது. பாகன் மீணடும் மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஏற முயற்சித்தும் யானை தும்பிக்கை மற்றும் வாலாள் தடுத்து நிறுத்துகிறது.
இந்த வீடியோ பாகன் மீது யானைக்கு உள்ள அன்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த பதிவு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.







