திருப்பூரில் ரேசன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளரை, பணியிடை நீக்கம் செய்து இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகரத்தில்1,150 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்திற்கு உட்பட்ட
விஜயாபுரம் பொன் முத்து நகர் பகுதியில் உள்ள, அரசு நியாய விலைக் கடையில்
விற்பனையாளராக இருந்தவர் இந்திராணி. இவர் பொருட்கள் எடை
போடுவதில் முறைகேடு செய்து, ஒரு கிலோவிற்கு கால் கிலோ அளவில்
பொருட்களை குறைத்து விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ரேஷன் கடையில் பருப்பு வாங்கி பாதிக்கப்பட்ட நபர் ரேஷன் கடை ஊழியரிடம், மீண்டும் தான் வாங்கிய பொருளை கொடுத்து தராசில் வைத்து எவ்வளவு எடை இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார். அப்போது,ரேஷன் கடை ஊழியர் எடை போட மறுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், வேறு சிலருக்கு வழங்கப்பட்ட பொருட்களை எடை போட நிர்பந்தித்த போது,
மூட்டையில் இருந்து பருப்பை அள்ளி தராசில் கொட்டிவிட்டு, அதற்கு பின் பையில்
இருந்த பருப்பை கொட்டுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ
வைரல் ஆனதை தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணகுமார்
கடையின் விற்பனையாளர் இந்திராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-கு.பாலமுருகன்